Tuesday, March 10, 2009
நான் கண்ட ஒற்றுமை???
தீபாவளிக்கு முதல் நாள் அன்று தி நகரில் தூணி எடுக்க சென்றது தப்பு என்று தோன்றியது. நான் அவ்வளவு நெரிசலை இதுவரை பார்த்ததுக்கூட இல்லை. ஒரு வழியாக தூணி எடுத்துவிட்டு கூட்டம் நிறைந்த அந்தகடையை விட்டு வெளியே வருவதற்குள் என் சட்டை வேர்வையில் நனைந்துவிட்டது. உடனே தி நகர் பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க தொடங்கினேன். கூட்ட நெரிசலில் நடப்பதற்குக்கூட இடமில்லை. ஒரு வழியாக உஸ்மான் தெரு முனையை அடைந்தேன். அந்த தெருவை கடக்க ஏற்கனவே ஒரு பத்து பேர் காத்துகொண்டு இருந்தனர். நான் சென்ற ஐந்து வினாடிகளில் தெருவை கடக்க நின்றுக்கொண்டு இருந்த கூடும் வெகுவாக கூடியது. இதை பார்த்த என் முன்னாள் இருந்த ஒருவர் சாலையை கடக்க முயற்சி செய்தார். அவரை பின் தொடர்ந்து அங்கு இருந்த கூட்டம் அனைத்தும் நடந்தனர். அந்த சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்த ஒருவர் இறங்கி வந்து "பச்ச லைட் போட்டுருக்குல இப்ப ஏன் கிராஸ் பண்ணுரிங்க?" என்று கேட்டார். உடனே அந்த கூட்டத்தை வழி நடத்தி சென்றவர், " இத்தன பேர் போறம்ல.. அவ்வளவு பேற்றையும் இடிச்சுட்டு போக முடிஞ்சா போ..." என்றார். இதை கேட்ட அந்த பைக்காரர் சிரித்து கொண்டே "இதுலையாவது ஒற்றுமையா இருக்கிங்களே" என்றார். உடனே அந்த ஒற்றுமை விரும்பி "ஒற்றுமையா!! அதுனா ஒண்ணுமில்ல.. செத்தா நான் மட்டுமா சாகப்போறேன் கூட ரெண்டு பேராவது சாவன்ல அதான்.." என்றார் நக்கல் பார்வையுடன். அந்த பைக்காரர் பேசுவது அறியாமல் திகைத்துப்போய் நின்றார். நான் பச்சை விளக்கு எரியும் பொது சாலையை கடந்தற்கு வருந்தினேன்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
dai mama..enna achu unaku.. hmmm.. any ways change photo da.. put your new hair style photo da..
mama...scene da.... epadi unnala mattum ipadi yosika mudiyuthu...
Post a Comment