கல்லூரியிலிருந்து வீட்டிற்கு மின்சார இரயிலில் வந்துக் கொண்டிருந்தேன். என் அருகில் இரண்டு சிறுவர்களும் அவர்களது தந்தையும் அமர்த்திருந்தார். அப்போது சமோசா விற்பவர் அங்கே வந்தார். இரண்டு சிறுவர்களுக்கும் அந்த தந்தை சமோசா வாங்கித்தந்தார். அந்த சிறுவர்களில் மூத்தவன் அதனை சாப்பிட்டுவிட்டு சமோசாவுக்கு கொடுத்த தாளினை வெளியே எறியச் சென்றான். இதைப் பார்த்த அவன் தந்தை தாளினை நன்றாகச் சுற்றி எறியும்படிச் சொன்னார். அந்த சிறுவனோ எதற்கு இப்படிச் சொல்கிறிர்கள் என்று கேட்டான். உடனே அவனது தந்தை தாளினை இரயில் ஓடும்போது எறிந்தால் பின்னாலிருப்பவர்கள்மீதுப் பட்டுவிடும் என்று கூறினார். இதனை முழுவதும் கவனித்துக்கொண்டிருந்த அந்த இளையவன் அவன் அப்பாவிடம் சொன்னான் " அப்ப தாள் எல்லாத்தையும் குப்பத்தொடியில போடாம கீழேயேப் போடலாமா அப்பா..??". இதனைக் கேட்ட அவனது தந்தை என்னச் சொல்லுவது என்றுத் தெரியாமல் திக்கு முக்காடிவிட்டார். அவர் மட்டுமில்லை இதனைக் கவனித்த அனைவருமே சற்று அந்த சிறுவனின் பொறுப்புணர்ச்சியைப் பார்த்துத் திகைத்துவிட்டோம்.
ஆம் நண்பர்களே இனியாவது நாம் எந்த ஒருப்பொருளையும் ரோட்டிலோ அல்லது இரயில் பயணத்தின்போது வெளியேவோ போடாமல் குப்பைத்தொட்டியில் போடுவோம் என்று உறுதிமொழி எடுப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment