அன்று வகுப்பு முடிந்து வெளியே வந்து நானும் என் நம்பனும் பேசிக்கொண்டு இருந்தோம். எங்களுக்கு எதிரில் இருந்த பிள்ளையார் கோயிலில் ஒருவர் வேண்டிக்கொண்டு இருந்தார். அவர் வேண்டுதலை முடித்தவுடன் கையிலிருந்த வாழைப்பழத்தில் ஊதுபத்தி இரண்டை ஏற்றினார். பின்பு அந்த பழத்தினை கோயில் வாசல் முன் வைத்துவிட்டு திரும்பவும் கும்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அந்த கோயிலின் பக்கத்திலிருந்த ஆடு ஒன்று அந்த பழத்தைச் சாப்பிடச் சென்றது. அதைக் கண்ட அந்த நபர் பிள்ளையாருக்கு வைத்த பழத்தினை ஆடு சாப்பிடுகிறது என்ற கடுப்பில் அதனை அங்கிருந்து துரத்திவிட்டார். ஊதுபத்தி ஏற்றின அந்த பழத்தினை சாப்பிடும் போதே அந்த ஆட்டின் வாய் சுட்டுயிருக்கும் என்னும் வருத்தத்தில் நானும் என் நம்பனும் பேசிக்கொண்டு இருக்க இருக்க, அந்த நபரோ கடவுளுக்கு வைத்த பழத்தில் ஆடு வாய் வைத்ததில் தெய்வக் குற்றமாகிவிடுமோ என்றே புலம்பிக்கொன்டுச் சென்றார். பாவம் அந்த நபருக்கு தெரியவில்லை சக மனிதனுக்கும் மற்று உயிரினங்களுக்கும் உதவிச் செய்வதேக் கடவுளுக்குச் செய்யும் படையல் என்று..
கடுவுள் நம்பிக்கை என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் மூடநம்பிக்கை என்ற ஒன்றை அறவே அழிக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment